பக்கம்:இறைவர் திருமகன்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

பைலேட்டு மலைத்துப் போனான். அவன் எதிர்பார்த்தது ஏமாற்றமாகி விட்டது.

“தாம் ஓர் அரசர் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மனிதரை என்ன செய்வது?" என்று கேட்டான்.

“சிலுவையில் அறையுங்கள்" என்று கூறியது மக்கள் கூட்டம்.

“இந்தத் தண்டனை தேவைதானா? தம்மை ஓர் அரசர் என்று சொல்லிக் கொண்டதைத் தவிர அவர் உங்களுக்கு என்ன தீமை செய்தார்?" என்று கேட்டான் ஆட்சித் தலைவன்.

இந்தக் கேள்வி அவர்கள் மனத்தை மாற்ற வில்லை. இரக்கவுணர்வோ, நீதி நெறி என்ற எண்ணமோ சற்றுமற்ற அந்தக் கும்பல், “சிலுவையில் அறையுங்கள்!" என்றே மீண்டும் மீண்டும் கூவியது.

"உங்கள் அரசரையா நான் சிலுவையில் அறைய வேண்டும்?" என்று மீண்டும் ஒரு முறை கேட்டான் பாண்டியஸ் பைலேட்..

“சீசரைத் தவிர எங்களுக்கு யாரும் அரசரல்லர். இந்த மனிதனை நீர் விடுதலை செய்தால்