பக்கம்:இறைவர் திருமகன்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

தொடங்கினான். நண்பனோ, அயலவனோ யாராயினும் ஒருவன் துயரத்துக்காளானால் அவனுக்கு உதவி செய்வதே மனிதன் கடமையாகும்.

அந்த சமாரியன் விரைவாகத் தன் மூட்டையை இறக்கி அவிழ்த்தான். திராட்சைச் சாற்றினால், அடியுற்றவனின் காயங்களைக் கழுவினான். பின் அப்புண்களில் அவை ஆறத்தக்க ஒரு எண்ணெய் மருந்தை ஊற்றினான். துணியொன்றைக் கிழித்துக் காயங்களையெல்லாம் கட்டினான். கைத்தாங்கலாக அந்த யூதன் எழுந்திருக்கச் செய்து தன் கழுதையின் மீது உட்கார வைத்தான். மெல்ல மெல்ல அதை ஓட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் இருந்த சிறு சத்திரத்தை அடைந்தான்.

சத்திரக்காரனை நோக்கி, “ஐயா, இந்த மனிதன் குணமாகும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள், நான் தரும் இந்தப் பணத்தை அவன் செலவுகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் அதிகமாகச் செலவு செய்ய நேரிட்டால், மீண்டும் நான் திரும்பி வரும்போது அத் தொகையைத் தந்துவிடுகிறேன்" என்று கூறிச் சென்று விட்டான்,