பக்கம்:இறைவர் திருமகன்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சிறந்த ஆடைகளைக் கொண்டு வாருங்கள். வைர மோதிரத்தை எடுத்து வந்து கைவிரலில் போடுங்கள். வீட்டில் இன்று நல்ல விருந்து ஆக்கிப் படையுங்கள். காணாமற்போன என் மகன் இன்று திரும்பி வந்து விட்டான். இன்று நாம் நன்றாக உண்டுகளித்திருப்போம்" என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தான்.

வயலுக்குச் சென்று திரும்பி வந்த பெரிய மகன், வீட்டில் ஆட்டமும் பாட்டும் ஒரே கோலாகலமாக இருப்பதைக் கவனித்தான். என்ன செய்தியென்று வேலைக்காரர்களை விசாரித்தான்.

தம்பி திரும்பி வந்த கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே இல்லை. தந்தையிடம் சண்டை போட்டுப் பணத்தை வாங்கி, வீட்டை விட்டு வெளியேறிச் சென்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டுத் திரும்பி வந்த ஒரு தீயவனை வரவேற்க அவன் விரும்பவில்லை. அவன் திரும்பி வந்ததற்காக ஏன் களிப்படைய வேண்டும் என்பது தான் பெரியவனின் கேள்வி?