பக்கம்:இறைவர் திருமகன்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

செலவு செய்யாமல் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுர்கள். நான் திரும்ப வரும்போது கணக்குச் சொல்ல வேண்டும்" என்று கூறி விட்டுச் சென்றான்.

முதல் வேலைக்காரன் தனக்குக் கிடைத்த பொன்னைக் கொண்டு வாணிபம் செய்தான். தன் திறமையினால் அவன் மேலும் ஐந்து நிறை பொன்னீட்டினான்.

இரண்டாவது வேலைக்காரனும் தனக்குத் தெரிந்த ஒரு வாணிபத்தைச் செய்து மேலும் இரண்டு நிறை பொன்னைச் சேர்த்தான்.

மூன்றாவது வேலைக்காரன் ஒரு சோம்பேறி. ஆகவே, அவன் தனக்குக் கிடைத்த ஒரு நிறை பொன்னைப் பத்திரமாகத் தரையில் புதைத்து வைத்தான்.

நெடுநாள் சென்று அவர்களுடைய முதலாளி திரும்பி வந்தான். ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, "உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளுக்குக் கணக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.

“தலைவரே தாங்கள் எனக்கு ஐந்து நிறை பொன் கொடுத்தீர்கள். நான் மேலும் ஐந்து