பக்கம்:இலக்கண வரலாறு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

77

நூற்றாண்டு என்பர். எனவே அக்காலத்திற்கு முற்பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆகலின் அம்மாலை தோன்றிய 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர். மேலும் பரணியாற் கொண்டான், (எழுத். 125, 248) என வருவது கொண்டு 1 கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந்திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11 ஆம் நூற்றாண்டு என்பர்.

இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடியினர் என்றும் கூறுவர். இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும், சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக்கிறார். உரையூரைக் கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது என்பது மிகத் தெளிவாக உள்ளது.

கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு; இன்றும் வழங்குவது என்பர். அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. ‘கோடின்று செவியின்று’ என்பது கொண்டு இந்நாளிலும் அங்கு அவ்வழக்குண்மையைக் குறிப்பர். ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 216)

‘கோடின்று செவியின்று’ ‘கோடில் செவியில’ ‘கோடுடைய செவியுடைய’ ‘கோடுடைத்து செவியுடைத்து’ என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். இவரை உண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும்,

1. உரை மரபுகள் பக். 94.95.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/122&oldid=1471302" இலிருந்து மீள்விக்கப்பட்டது