பக்கம்:இலக்கண வரலாறு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

வேண்டிற்றன்று, தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக் காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம்.

‘நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொ. 13) 'தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்' என்பதும் (சொ. 33) 'தமிழ்நாட்டு மூவரும் வந்தார்' என்பதும் (சொ. 250) 'புலி விற் கெண்டை' என்பதும் (சொ. 411) இளம்பூரணரின் தமிழ் நில முழுதுறு பார்வையையே சுட்டுகின்றன. மேலும், 'நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்' என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங்குணரார்; தாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது", என்று கூறும் இவர் உரையால் (சொ. 392) நாடு தழுவிப்பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க.

தமிழகத்து எக்குடிப் பிறந்தாரும் வேளாண்டொழிற் கூறு அறியாதிரார். வாழ்வும் வளமும் வைப்புமாக இருக்கும் வேளாண்மை உலகுக்குத் தாய்த் தொழில்; தமிழ் மண்ணுக்கோ தலைத் தொழில், அத்தொழிலே

“சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

என்பது வள்ளுவ வாய்மொழி. உழவர் கூற்றாகலின் அத் தொழில்தொடர்பான செய்திகள் பலவாக எடுத்துக் காட்டப்பட்டிருத்தல் இயற்கை. அது கொண்டு ஒரு குடிப் பாற்படுத்த வேண்டுவதில்லை. இவரொரு ‘முழு நிறைமாந்தர்’ என்பது சாலும்.

இளம்பூரணர் உரைநயங்கள்:

அருஞ்சொல்லுக்குப் பொருள் கூறுதல்: ‘குயின் என்பது மேகம்’ (எ. 336), 'மின் என்பது ஓர் தொழிலுமுண்டு பொருளுமுண்டு' (எ...346), 'அழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/123&oldid=1471304" இலிருந்து மீள்விக்கப்பட்டது