பக்கம்:இலக்கண வரலாறு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

னென்பது பிணம்’ (எ. 355) ‘மூங்கா என்பது கீரி’ (பொ. 550) ‘நவ்வி-புள்ளிமான்’ (பொ. 556), ‘கராக மென்பது கரடி’ (பொ. 56) இவ்வாறு அருஞ்சொற் பொருள் வேண்டுமிடத் துரைக்கின்றார்.

கோயில் என்பதா? கோவில் என்பதா? எனின் இரண்டும் சரியே என்பார் உளர். அவற்றுள் 'கோயில்' என்பதே சரியானது என்பதை ‘இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்’ என்னும் நூற்பாவில் (எ. 294) தெளிவாக்குகிறார்.

‘கஃறு' என்பது உருவு. ‘சுஃறு’ என்பது இசை’ என்பதைத் தேர்ந்து சொல்கிறார் (எ. 40).

‘தபு’ என்பது படுத்துச் சொல்ல 'நீ சா' எனத் தன்வினையாம் எனவும், அதனை எடுத்துச் சொல்ல ‘நீ ஒன்றனைச் சாவி’ எனப் பிறவினையாம் எனவும் அசையழுத்தம் (accent) காட்டி விளக்குகிறார் (எ. 76).

அஃறிணை என்பது அல்திணை. அல்லதும் அதுவே, திணையும் அதுவே எனப் பிரித்துக் காட்டி விளக்குகிறார் (சொ. 2).

சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும் ஆண்டுச் சில பார்ப்பனக்குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது, இஃது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது என்கிறார் (சொ. 49).

“பல பொத்தகம் கிடந்த வழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, ‘பொத்தகங் கொண்டு வா’ என்றால், அவன் ஒரு பொத்தகம் கொண்டு வந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் ' மற்றையது கொணா' என்னும்; என்றக்கால் இக் கொணர்ந்ததனை ஒழிக்கும் சொல் இக்கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டு நிலை அதனை ஒழித்து ஒழிந்ததென்று அவ்வினத் தல்லது பிறிதொன்று குறித்தது - கொல்லோ எனிற்குறியா, மற்று அப் பொத்தகத்துள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/124&oldid=1471305" இலிருந்து மீள்விக்கப்பட்டது