பக்கம்:இலக்கண வரலாறு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

கிறார். "அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன் கூறல்" என மேல் விளக்கம் செய்கிறார். (பொ. 74) எத்தகு நாகரிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரை யாகலின் மறுப்புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை. எனினும் பல்வேறு பாடங்களும் உரைகளும் பற்பல ரிடத்துக்கேட்டிருக்கக் கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார்.

"பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினாராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றத் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாதலின் உய்த்துணர்த்த கண்டு கொள்க" என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனங் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் 'நுண்மான் நுழை புலத்தால்' கண்டு கொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும்.

தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று 'கட்டுரை இன்மை' என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? ‘கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது’ என்பதும் கூறுகின்றார். எவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ. 109)

‘சிற்றாறு பாய்ந்தாடும்’ எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/130&oldid=1471490" இலிருந்து மீள்விக்கப்பட்டது