பக்கம்:இலக்கண வரலாறு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

வேறுரைகள்:

சேனாவரையர்க்கு முன்னரே சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையெழுதியிருந்தார். அவருரை சேனாவரையர் உரைத் தெளிவுக்கு மிக உதவியிருக்கும். இளம்பூரணரின் ஆய்வின் மேல் ஆய்வு சேனாவரையர் செய்தலால், உரைச்செப்பங்களும், விளக்கங்களும் கிடைத்தல் இயற்கை. ஆதலால், முதல் நூற்பாவிலேயே உரையாசிரியரைச் சுட்டுகிறார் சேனாவரையர்.

"சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. உரையாசிரியரும் எழுத்தாதல் தன்மையொடு புணர்ந்து என்பார் 'எழுத்தொடு புணர்ந்து' என்றாராகலின், ஒருபுடை ஒற்றுமையே கூறினார். தன்மையொடு புணர்ந்து என்னாக்கால் ஓரெழுத்தொரு மொழிக்கு எழுத்தொடு புணர்தல் இன்மையின் சொல்லாதல் எய்தா தென்க" என்று கூறி உரையாசிரியரைப் பாராட்டுகிறார்.

உரையாசிரியரை ஐம்பத்திரண்டிடங்களில் சுட்டிச் செல்கிறார் சேனாவரையர். ‘அவர்க்கு அது கருத்தன்று என்க’ என்னும் வாய்பாட்டால் 27 இடங்களிலும், ‘அவ்வுரை போலியுரை என்க’ என்னும் வாய்பாட்டால் 18 இடங்களிலும், ‘உரையாசிரியர் கருத்து இதுவேயாம்’ என ஓரிடத்தும், ‘உரையாசிரியர் பிறர் மதம் உணர்த்திய கூறினார்’ என மூன்றிடத்தும் ‘மறுக்க’ என ஓரிடத்தும், ‘ஆண்டு அடங்காது’ என ஓரிடத்தும் பாராட்டுதல் ஓரிடத்துமாக அவரைச் சுட்டுதல் 52 இடங்களாம்.

இனி உரையாசிரியர் பெயர் சுட்டாமல் ‘ஓருரை’ என்றும் (249, 428) என்பாரும் உளர் என்றும் (186, 285, 316, 368, 450, 451) ஒரு சாரார் என்றும் (394, 441, 449, 452, 453, 457, 463), ‘மற்றொரு சாரார்’ என்றும் (412) உரைக்கின்றவற்றை நோக்கச் சொல்லதிகாரத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/139&oldid=1471498" இலிருந்து மீள்விக்கப்பட்டது