பக்கம்:இலக்கண வரலாறு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

நூலின் இடையும் கடையும் தலையும் மங்கலம் அமைய நூலியற்றும் வழக்கைக் குறிப்பிடுகிறார் (82).

கெட்டது என்பது காணாமற் போனது என்னும் பொருள் தருதலை ‘நம் மெருது ஐந்தனுள் கெட்ட எருது யாது?’ என்பதால் அறிய வைக்கிறார் (32).

“வினை என்பது அறத்தெய்வம். சொல் என்பது நாமகளாகிய தெய்வம்” என்று இவர் கூறுவது ஆழ்ந்த கருத்தினது (57).

“உருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டம் என்னும் தொடக்கத்தன” என்பதால் ஒரு பொருட் பன்மொழிகளை அமைக்கிறார் (24).

இனியது என்பதைத் ‘தீவிது’ என்பது நயமாக உள்ளது (78).

தொண்டு தொண்டன் என்பவை மதிப்புப் பொருளாக வழங்காமை அவர் காலத்திருந்தது என்பதை, “தாம் வந்தார் தொண்டனார் எனப் பன்மைக் கிளவி இழித்தற் கண்ணும் வந்ததால் எனின், ஆண்டு உயர் சொல்தானே குறிப்பு நிலையாய் இழிபு விளக்கிற்றென்பது” என்பதால் அறியச் செய்கிறார் (27).

“முன்தேற்று — புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல்” (383).

“எவ்வகையானும் அறியாப் பொருள் வினாவப் படாமையின் ஈண்டு அறியாப் பொருள் என்றது பொது வகையான் அறியப்பட்டுச் சிறப்பு வகையான் அறியப் படாத பொருளையாம்" (31).

—இன்னவை தெளிவுறுத்த வல்ல தேர்ச்சிச் சான்றுகள்.

"உலக வழக்கு நடை இத்தகைத்து என்பதை அருமையாகக் குறிக்கிறார் சேனாவரையர் (416).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/143&oldid=1471502" இலிருந்து மீள்விக்கப்பட்டது