பக்கம்:இலக்கண வரலாறு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

103

உரை கொண்டு ஆய்வு செய்து ‘அவர் இவர்’ எனல் தீர்வு ஆகாது.

பேராசியர் உரை முதற்கண், நச்சினார்க்கினியர் உரை என்றே தொல்காப்பியப் பதிப்பாளர் சி. வை. தாமோதரனாரால் குறிக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் எழுதிய அகத்திணை, புறத்திணை, களவு, கற்பு, பொருள் இயல்களுடன் இணைத்துப் பதிப்பிக்கவும் பட்டது. அவ்வுரையுள் மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு ஆகிய நான்கு இயல்களும் பேராசிரியருரை என்பதைச் செந்தமிழ் ஆசிரியர் இரா. இராகவர் ஆய்ந்து செந்தமிழ் இதழில் வெளிப்படுத்தினார். நச்சினார்க்கினியரின் செய்யுளியலுரைப் பதிப்பிலும் விளக்கினார். இவ்வாறு உரையாசிரியர் பெயரை அறிதலிலும் சிக்கலுண்டாயிற்று.

பேராசிரியர் உரை:

பேராசிரியர் பொருளதிகாரம் முழுமைக்கும் உரை கண்டவர் என்பது புலப்படுகின்றது. மெய்ப்பாட்டியல் 18ஆம் நூற்பா உரையில் ‘களவியலுட் கூறினாம்’ என்கிறார். அடுத்த நூற்பா உரையிலும், செய்யுளியல் முதல் நூற்பா உரையிலும் முறையே ‘அகத்திணையியலுட் கூறினாம்’ என்றும், ‘அகத்திணையியலுட் கூறிவந்தாம்’, என்றும் கூறுகிறார். இவ்வாறே கற்பியல், புறத்திணை யியல் ஆகியவற்றைச் சுட்டிய இடங்களும் உள. இவற்றால் பொருளதிகாரம் முழுமைக்கும் இவர் உரை கண்டார் என்பதை அறிந்து கொள்ள வாய்க்கின்றது.

பேராசிரியர் வரைந்த முதலைந்து இயல்களின் உரையும் கிடையாமல் போகவே, கிடைத்த உரைப் பகுதியின் முகப்பில் உரை கண்டவர் பெயர் இல்லாது போய்விடுதல் இயல்பு. ஆனால், விழிப்புடைய சிலர் ஒவ்வோர் இயல் முகப்பிலும் ‘இன்னவர் உரை’ என்று வரைவதுண்டு. அவ்வகையில் மெய்ப்பாட்டியல் முகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/148&oldid=1471507" இலிருந்து மீள்விக்கப்பட்டது