பக்கம்:இலக்கண வரலாறு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

110

முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப" என்றும் (மெய்ப். 3), “முன்னம் என்பது உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப்படச் செய்தல்” என்றும் (செய். 1) வரும் இன்னவை வகைப்படுத்திக் கூறற் சான்றுகள்.

நூற்பா அமைதி காட்டல்:

ஒரு நூற்பாவின் யாப்புரவை மற்றொரு நாற்பாவின் யாப்புரவுடன் இயைத்துக் கூறுதலையும் பேராசிரியர் மேற் கொள்கிறார்.

தெய்வமஞ்சல் என்னும் நூற்பாவில் (மெய்ப். 24) “பதினொன்றனை எண்ணிச் சிறந்த பத்து இவை என்ற தென்னை எனின், அதனை, 'ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே' என்ற மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றியுரைக்கப்படும்” என்கிறார்.

உரை நூற்பா

தாமே உரை நூற்பா வகுத்துக் கூறுவதுபோல் கூறும் இடங்களும் பேராசிரியர் உரையில் உள. அவற்றுள் ஒன்று: இருவகை நிலனென்பன, ‘உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்’ அன்றோ எனின், என்று அமைத்துக் கொண்டு, அதனை விளக்குதலால் அவர் உரை நூற்பா யாத்து விளக்குதல் அறியப் பெறும் (மெய்ப். 1). இவ்வாறே ‘நிரனிறுத் தமைத்தல்’ என்னும் நூற்பா உரையில் (உவம். 37) ‘அகனமர் கேள்வன்’ என்றோர் நூற்பா வகுத்து ‘அதன்மேல்' என்றோர் சூத்திரம் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது’ என்பார். அதுவும் அது.

பாடம் கூறுதல்:

‘கூற்று வகை’ என்பதற்குக் ‘கூற்றிவை’ எனப் பாடமுண்மையைச் சுட்டும் பேராசிரியர், “இவை என்பது பாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/155&oldid=1471512" இலிருந்து மீள்விக்கப்பட்டது