பக்கம்:இலக்கண வரலாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

112

சொற்பொருள் விளக்கம்:

சொற்பொருள் விளக்கம் தருதலில் பேராசிரியர் தனிச் சிறப்புடையவர். இவர் தரும் சொல் விளக்கத் தூண்டல் வழியாகவே “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்றொரு நூல் என்னால் தொகுக்கப்பட்டது. அதன் முன்னுரையில் மெய்ப்பாடு என்னும் சொல் முதலாக அப்பேராசிரியர் தரும் சொற் பொருள் விளக்கம் நினைந்து நினைந்து உணர்த்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே (ஆண்டு 1951) சொற்பொருள் விளக்கவித்து என் நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது” என்பது அது. அப் பேராசிரியர் உரையால் நாம் முதற்கண் பெறவாய்த்தது ‘மெய்ப்பாடு’ என்னும் சொல்லின் விளக்கம்.

“மெய்ப்பாடென்பது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல் என்பது” (மெய்ப். 1).

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே”

என்னும் நூற்பாவில் (மெய்ப். 9),

‘வீரத்தைப் பெருமிதம் என்றெண்ணினான். என்னை? எல்லாரோடும் ஒப்ப நில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமிதம் எனப்படும் என்றற்கென்பது.

கல்வி என்பது, தவமுதலாகிய விச்சை. தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்டவிடத்து அஞ்சாமை.

இசைமை என்பது, இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/157&oldid=1471514" இலிருந்து மீள்விக்கப்பட்டது