பக்கம்:இலக்கண வரலாறு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

லாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகவிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க என்றும் (புறத். 12),

“அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார் என்றும்” (நூன். 1),

“தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க” என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார்.

எதிரிடை

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
(கற். 4)

என்னும் நூற்பாவில், “ஈண்டு ‘என்ப’ என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது” என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத் துணிந்தார். அதனால், “அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்" (கற்.1) என்றும் “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது” (கற். 2) என்றும், மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும்” என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங்களும், “வேத முடிபு” (அகத். 5), “வேத நெறி அன்மை” (அகத். 11), “வேத நூலுள் இழைத்த பொருண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/165&oldid=1471524" இலிருந்து மீள்விக்கப்பட்டது