பக்கம்:இலக்கண வரலாறு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

123/

என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேரவைத்தார் போலும்” என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன். I)

‘கண்ணிமை நொடியென’ — ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, “நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின்” என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 1).

“இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்னே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று” என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன். 24).

‘காரும் மாலையும் முல்லை’ என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, "முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார் காலமாம்; என்னை ? வினை வயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித் தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வருஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலாலும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோ டின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/168&oldid=1471527" இலிருந்து மீள்விக்கப்பட்டது