பக்கம்:இலக்கண வரலாறு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

137

“சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவன் ஆதலின் சொல்லென்பது ‘வேதம்’ என்று கொள்ளப்படும்” என்கிறார். இவர் தொல்காப்பியரை வைதிக முனிவன் என்று கொண்டதால் அக்கொள்கைக்கு ஏற்ப உரை செய்யத் துணிகிறார்.

வடசொல்

“எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டில் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல் என்றதனால் தேயவழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்க.

வடமொழியாவன: வாரி, மணி, குங்குமம் என்னும் தொடக்கத்தன. வட்டம் நட்டம் பட்டினம் என்பன பாகதம்” என்கிறார் (397).

ஒருவினை ஓடுச்சொல் என்னும் நூற்பா உரையில் (88), பிற உரையாசிரியர்களின் கருத்துக்கு மாறுபடும் இவர் “இப்பொருள் பாணினியார்க்கும் ஓக்கும்” எனத் தமக்குச் சார்பு காட்டுகிறார். ஒரு சார் ஆசிரியர் வேற்றுமை ஏழெனக் கொண்டதையும் குறிக்கிறார் (150).

ஆசிரியர் சிறப்பு

“‘அய்’ என யகர ஈறு விளி ஏற்றதால் எனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத் தோதிற்றிலர்” என்று அமைதி காட்டும் இவர் அதிகாரப் புறநடையால் கொள்ள ஏவுகிறார் (150).

இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை பொருண்மை நிலையில் வரும் வகையை ஆசிரியர் விரித்துரையாமையை எண்ணும் இவர், பொருண்மை நிலை வழக்கினும் சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும் இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/182&oldid=1471549" இலிருந்து மீள்விக்கப்பட்டது