பக்கம்:இலக்கண வரலாறு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

140

புலா அல்’ (திருக். 257) எனவும் வருதலின்” என்று எடுத்துக்காட்டி ‘உண்டு’ என்பது உண்ணல், கறித்தல், குடித்தல், சுவைத்தல் முதலிய பலவற்றுக்கும் வரும் பொது வினையாதலை விளக்குகின்றார் (45).

‘குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி’ என்பதற்குச் ‘சேவலை’ எடுத்துக் காட்டுகிறார் (54). அதில், ‘நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்’ (பரிபா. 3:18) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறு. ௧.) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழி யாயிற்று” என்கிறார். இத்தகும் இணைப்புச் சான்றுகள் தெய்வச்சிலையார் கொண்டிருந்த இலக்கியப் பயிற்சியின் பரப்பை வெளிப்படக் காட்டுவன.

வேற்றுமைகள் அனைத்தும் முறையே வருமாறு இவர் காட்டும்,

“காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி
மாதரிக்குக் காட்டி மனையின் அகன்று போய்க்
கோதில் இறைவனது கூடற்கண் கோவலன் சென்
றேத முறுதல் வினை”

என்னும் இன்னிசை வெண்பா எடுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாவதுடன் சிலப்பதிகாரச் செய்திச் சுருக்கமாகவும் அமைந்து சுவை பயக்கின்றது.

பாவம்

“விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்”

என இளம்பூரணரும்,

“விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்”

எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பாடம் கொண்டனர். அதனை இவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/185&oldid=1471553" இலிருந்து மீள்விக்கப்பட்டது