பக்கம்:இலக்கண வரலாறு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

வழக்கு, அதனை இவர், “சாத்தன் சோற்றைக் குழிசியாற் பார்ப்பார்க்கு மச்சிநெற் கொண்டு கூரையுள்” என்று கூறுவதால் அறியவாய்க்கின்றது (113). மச்சு நெல் என்பது பாடமாக இருக்கலாம். அன்றி மச்சு, மச்சி எனத் திரிதலுமாம் (எ-டு) குச்சு-குச்சி.

நாடு - சமயம்

நும்நாடு யாது என்பதற்குத் ‘தமிழ் நாடு’ என உரையாசிரியர் கூறினாராக, இவர் நும் நாடு யாது என்பதற்குப் ‘பாண்டிநாடு’ என்பதும் கருதத்தக்கது. இவர்தம் நாட்டுச் சார்பு வெளிப்பாடு இஃதெனக் கருதலாம் (13). ஆனால் தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோரும் இவ்வாறே உரைப்பர்.

“நாற்றம், பூதி நாற்றம் என்பு நாற்றம் முதலாயின” (79) என்று இவர் கூறுவது கொண்டு சைவம் சார்ந்தவரோ எனக்கருதுவர் (பழைய உரை: ஆராய்ச்சி முன்னுரை).

மறுப்பு

இருபத்தைந்தாம் நூற்பாவுரையில், “அவர் சொன்முறை அறியார்; ஆதலால் அஃதுரையாமை அறிக” என மறுக்கிறார். இம்மறுப்பு தெய்வச் சிலையார் உரையை என்பது தெளிவாகின்றது. ஆனால், இவர் பிற உரையாசிரியர் பெயர் சொல்லி மறுப்புரை எழுதினார் அல்லர். அவ்வாறே இவ்வுரையாசிரியர் உரையிஃதென உரைத்தாரும் அல்லர். ஓரிடத்தே சேனாவரையரையும் உரையாசிரியரையும் பெயர் சுட்டியமை முன்னே குறித்தாம்.

எடுத்துக்காட்டு

பெரும்பாலும் முந்தையோர் உரை வழியிலேயே செல்லும் இவ்வுரைகாரர் நோக்கு எடுத்துக்காட்டுக் காட்டுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதைப் பிறர் காட்டாத எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/192&oldid=1471577" இலிருந்து மீள்விக்கப்பட்டது