பக்கம்:இலக்கண வரலாறு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

152

அளவில் உரைபெருகிற்று என்றால் விருத்தி என்பதற்கு ஐயமுண்டோ?

இதன் தொடக்கத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் பகுதியில் சித்திவிநாயகனார், அறுமுகக் கடவுள், அங்கயற் கண்ணம்மை, ஆலவாய்ப் பெருமானடிகள் வாழ்த்துகள் இருப்பதால் இவர் தம் ‘சைவ சமயம்’ இனிது விளங்கும்.

இவ்விருத்தியை எழுதுவதற்குரிய காரணத்தை நூலாசிரியரே நன்றி கூறல் பகுதியில் கூறுகிறார். இப் பாயிர விருத்திக்கு முன்னரே ‘நுண்பொருட்கோவை’ என நூல் எழுதியதையும் ஆங்குக் குறிக்கிறார். நூன்முழுமைக்கும் உரை காணவேண்டும் என்னும் பேரார்வத்தால் ஈடுபட்டார் என்பதும், ஓராற்றான் மூன்று இயல்கள் உரை எழுதி முற்றுப்பெற்றார் என்பதும் அறியப் பெறினும் தமிமுலகம் பெறவாய்த்தது இப்பாயிர விருத்தி ஒன்றுமே என்க.

இதனை, 'அந்நூலும் (தொல்காப்பியமும்) அதன் 'உரையும் பின்னூலும் ஆராய்வான்புக்குச் சிற்சில இடத்து முன்னுரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமையில் தொன்னூல் துணிபு இதுவோ அதுவோ எனவும் பிறிதொன்றோ எனவும் ஐயுற்றும், பன்னூறு முறைப்படப் பல்லாற்றான் நாடி என்னறிவிற்கு எட்டிய அளவின் அவற்றுட் சில துணிந்தும் இற்றைக்கு ஐந்து யாண்டின் முன்னர்த் தொல்காப்பியத்துட் சிற்சில குத்திரங்கட்கே உரையெழுதக் கருதி 'நுண்பொருட் கோவை' எனப் பெயரிய ஒரு நூல் எழுதினேன்.

“பின்னர் ஆயுந்தொறும் முன்னூலாகிய தொல்காப்பியக் கருத்துடன் அந்நூல் உரைகளும் நன்னூல் முதலாய பின்னூல்களும் பெரும்பாலும் முரணாயின எனத்தோன்றலின் முற்றும் எழுதத் துணிந்து சுபகிருது யாண்டு பங்குனித்திங்கள் உத்தரத்தில் தொடங்கி எழுதி வருகின்றேன். இதுகாறும் எழுத்ததிகார மேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/197&oldid=1471582" இலிருந்து மீள்விக்கப்பட்டது