பக்கம்:இலக்கண வரலாறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xix


நேமிநாத உரையாசிரியர்

எடுத்துக்காட்டைச் சிறுகதை போலப் படைத்துக் கூறுவதையும் இவர் மேற்கொள்கிறார் (பக். 261).

நன்னூல் - மயிலைநாதர் உரை

பின்னுரைகள் இவ்வுரையினும் திருத்தமும் தெளிவும் பெற்றுள எனின், இவ்வுரையின் கொடை தந்த வளர்ச்சி என்பதால் இவ்வுரையின் சிறப்பு இனிது விளங்கும் (பக். 291).

களவியற்காரிகை உரை

எடுத்துக்காட்டும் மேற்கோள் இன்ன நூலைச் சேர்த்தது என்பதைக் திட்டமாக உரைக்கும் சீர்மையுடையது உரை. அதனால் ஆய்வுலகம் பெற்றுள்ள நலம் அளப்பரிது (பக். 326).

5. பதிப்புகளைக் குறிப்பிடுதல்

இந்த நூலின் ஆசிரியர், பெரும்பான்மையான இலக்கண நூல்களின் பதிப்புப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார். அந்த விவரங்கள் யாப்பருங்கல விருத்தியுரை முதல் அதன் பின் தோன்றிய நூல்களுக்கு எல்லாம் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியம் முதல் புறப்பொருள் வெண்பாமாலை ஈறாக உள்ள நூல்களுக்கும் பதிப்புப் பற்றிய விளக்கம் தந்திருப்பின் மிகவும் பயன் ஏற்பட்டிருக்கும்!

தரப்பட்டுள்ள பதிப்பு விவரங்கள் வெறும் பட்டியலாக இல்லாமல், ஒவ்வொன்றையும் நேரில் கண்டு படித்தறிந்து தரப்பட்ட விளக்கங்களாக உள்ளன. முதன்முதலில் மூலமும் உரையுமாக நூல் அச்சிட்ட ஆண்டு, அதன் தகுதி, பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள், பதிப்புத் தோறும் வேறுபட்ட நிலை ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

இத்தகைய விளக்கங்கள் யாவும், இலக்கண ஆய்வில் விரிவாக ஈடுபட விரும்புபவர்க்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்; மறு ஆய்வு செய்யத் துணை புரியும்.

பதிப்பு விவரங்களில் நம் சிந்தனையைத் தூண்டும் இடங்களில் சில, அடுத்துத் தரப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/20&oldid=1480816" இலிருந்து மீள்விக்கப்பட்டது