பக்கம்:இலக்கண வரலாறு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

எளிதாக இருக்கும். ஆனால் அது களவியலின் தொடக்கத்திலிருந்து 406-ஆம் சூத்திரமாக உள்ளது. இது மிகமிகச் சேய்மை நிலையுடையதாகும். இவ்வாறே கற்பின் வகை கூறும் ‘மறைவெளிப்படுதலும்’ என்னும் சூத்திரம் செய்யுளியலின் 187-ஆம் சூத்திரமாக உள்ளது, இது கற்பியலின் தொடக்கத்திலிருந்து 347-ஆம் சூத்திரங்கட்கு அப்பாலுள்ளதாகும்.

இவ்வாறு இடமாறியும் மிகச் சேய்மை நிலையிலும் உள்ள சூத்திரங்களெல்லாம் அவை இருக்க வேண்டிய இடங்களில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. களவு கற்பியல்களின் வழுவமைக்கும் பொருளியற் சூத்திரங்கள் அவ்வவ்வியல்களில் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன.

பொது வழுவமைக்கும் பொருளியற் சூத்திரங்கள், கற்பியலிலுள்ள கூத்தர் முதலியோர் கூற்றுச் சூத்திரங்கள், செய்யுளியலிலுள்ள களவு கற்புக் கூற்றுச் சூத்திரங்கள், மரபியலிலுள்ள நாற்பான் மரபுச் சூத்திரங்கள் முதலியவற்றை 1. நாற்பான் மரபு. 2. கூற்று, 3. கேட்போர், 4. வாயில்கள், 5. கூறுதல், 6. வழுவமைதி, 7. வழக்கு, 8. முறைப்பெயர் என்னும் தலைப்புக்களிற் சேர்த்துப் பொதுவியல் என்னும் பெயரில் அகத்திணையியலை அடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அகத்திணையியலிலுள்ள உள்ளுறை உவமம் கூறும் சூத்திரங்களும் பொருளியலிலுள்ள இறைச்சி கூறும் சூத்திரங்களும் உவமவியலில் சேர்த்து முறை செய்யப்பட்டுள்ளன.

களவியலில் இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்னும் பலவிடங்கட்குரிய தலைவன் கூற்றுக்கள் ஒரே சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறே கற்பியலின் மலிவு, புலவி, ஊடல் உணர்வு, பிரிவுகட்குரிய கூற்றுக்களும் ஒரே சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இங்ஙனமே பல விடங்கட்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/203&oldid=1471610" இலிருந்து மீள்விக்கப்பட்டது