பக்கம்:இலக்கண வரலாறு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

முடிபு தொல்காப்பியத்தைக் காப்பதற்கு மட்டுமன்று; பல்காப்பியங்களையும் காத்தற் குரியதாம். (தொல்காப்பியக் கடல்-பக். 88; வ.சுப. மாணிக்கனார்.)

புலவர் குழந்தை இராவண காவியம், யாப்பதிகாரம், தொடையதிகாரம், திருக்குறள் உரை, அரசியல் அரங்கம் முதலாய நூல்களை எழுதியவர். சீர்திருத்த நோக்கினர். ஓலைவலசு என்னும் ஊரினராகிய இவர் பூவானி என்பதும் பவானி என வழங்கப்படுவதும் ஆகிய ஊரில் வாழ்ந்தவர். மொழிப் பற்றில் தலை நின்றவர். இவர் காலம்.

ஔ. தொல்காப்பியத் தொடர் பணிகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொல்காப்பிய உரைப் பதிப்புகள் பல வெளிவரத் தொடங்கின.

பூவிருந்தவல்லி சு. கன்னியப்ப முதலியார் 1868-இல் தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணருரையை வெளியிட்டார். 1892 முதல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியப் பகுதிகள் வெளிவரத் தொடங்கின. ச. பவானந்தம் பிள்ளை, கனகசபைப் பிள்ளை, சி. கணேசையர், இராகவ ஐயங்கார், வ. உ. சிதம்பரனார், சி.வையாபுரிப் பிள்ளை, கரந்தைக் கவியரசு முதலியோர் இப்பதிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர்த் தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்தும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியே ஒவ்வொன்றாக 1921 முதல் வெளி வந்தன. அவற்றுக்குக் கந்தசாமியார், தேவநேயப் பாவாணர், கு. சுந்தரமூர்த்தி ஆகியோர் குறிப்புரை ஆய்வுரை ஆகியன எழுதியுள்ளனர்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வழியேஇ.வ—11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/206&oldid=1472486" இலிருந்து மீள்விக்கப்பட்டது