பக்கம்:இலக்கண வரலாறு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xx


1. நம்பி அகப்பொருள் நூலுக்கு, இப்போதுள்ள பாயிரச் செய்யுளே அல்லாமல், 'பூமிசை நடந்த' என்று தொடங்கும் மற்றொரு பாயிரச் செய்யுளும் உண்டு; அது, அ. குமாரசாமிப்பிள்ளை பதிப்பில் உள்ளது (பக். 316).

2. நம்பி அகப்பொருளின் நூலாசிரியரே உரையும் எடுத்துக்காட்டும் செய்த ஏட்டுச் சுவடிகளும், அச்சுவடிகளின் வேறாகப் பழைய உரையுடன் தஞ்சைவாணன் கோவை மட்டுமே எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட சுவடிகளுமாக இருவேறு சுவடிகள் இருந்தன. இரண்டையும் இணைத்துப் பதிப்பாளர்கள் பதிப்பித்து விட்டனர். (பக். 320).

3. ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகையுரை 1880இல் வெளிவந்தது (பக். 31). 1953இல், 28ஆம் பதிப்பு வெளிவந்தது (பக். 312).

6. வழிகாட்டி

இந்த நூலின் ஆசிரியர் வருங்கால ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கும் வகையில், பல இடங்களில் சிறந்த ஆய்வு நுட்பங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். அத்தகைய இடங்கள் கீழே தரப்படுகின்றன.

1. மாணிக்கவாசகர் இயற்றியுள்ள குவலயானந்தம், என்னும் அணி நூல், குன்றக்கூறல் முதலிய பத்துக் குற்றங்களையும் குறிப்பிட்டதோடு நில்லாமல், அவை ஒவ்வொன்றையும் தனித்தனி நூற்பாவால் விளக்கியுள்ளார். (பக், 420).

2. முத்துவீரியம் கூறும் அளபெடைகள் எட்டும் புதியவை (பக். 403).

3. 'அறுவகை இலக்கணம்' என்னும் நூல் கூறுகின்ற எழுத்துகளின் உருவமும் ஒலியும் புதுமையானவை (பக்.425). இந்த நூல் கூறும் 'புலமை இலக்கணம்' இன்றும் என்றும் எண்ணிப் பார்க்கவேண்டியவை (பக். 428).

4. வீரமாமுனிவர், ஏகாரக்கீழ்க்கோடும், ஓகாரக் கீழ்க்கோடும் அமைத்தார் என்னும் கருத்து மேலாய்வுக்கு உரியது. (பக். 389).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/21&oldid=1480817" இலிருந்து மீள்விக்கப்பட்டது