பக்கம்:இலக்கண வரலாறு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

வழிநூல் என்று சொல்லப்படாது. முதனூல் எனப்படும்," என்கிறது உரை. ஏன்?

தொல்காப்பியத்தில்,


“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூல் ஆகும்”

என இலக்கணம் உள்ளது. அதனை அறிந்த உரையாசிரியர், தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டது எனினும் அது கூறும் இலக்கணத்துள் ஒரு பகுதியாம் பொருளிலக்கணத்திலும் ஒரு கூற்றை வாங்கிக் கொண்டு செய்யப்பட்டது எனினும், ‘இறைவன்’ செய்ததாகக் கொண்டமையால் அவற்கு இழுக்காகா வகையில் ‘முதனூல்’ என்கிறார். ஆனால், அவர் நாளிலேயே இதனை வழி வழிநூல் என்று சொல்வார் இருந்தமையால் வழி நூல் என்று சொல்லப்படாது’ என ஆணையிடுகின்றார். எனினும் சிக்கல் தீர்ந்தபாடில்லை.

“இது தொகுத்து யாக்கப்பட்டது; என்னை? உலகத்து நடக்கும் அகப்பொருட் செய்யுளிலக்கணம் எல்லாம் இவ்வறுபது சூத்திரத்துள்ளே தொகுத்தானாகலின்”, என்றும் (I),

"ஐந்திணை என்றதல்லது அவற்றது பெயரும் முறையும் இலக்கணமும் அறியச் சொல்லிற்றிலரோ எனின், இது சுருக்க நூலாகலிற் சொல்லிற்றிலர்; அவை முடிந்த நூலிற் கொண்டு உரைக்கப்படும்" என்றும் (I),

“இதனை முதனூல் என்று புகுந்தமையால் ‘கந்தருவ வழக்கம்’ என்றே மொழியற் பாற்று; ‘என்மனார்’ என்று சொல்லற் பாற்றன்று; அது வழி நூல் வாய்பாடாகலான் என்பது கடா. அதற்கு விடை, பிற நூலெல்லாம் ஆசிரியப் பகுதிப்படும். இதுவும் அவையே போல ஆசிரியப் பகுதிப் படுங்கொல்லே எனின், படாது. கந்தருவ வழக்கம் போல்வது களவாதல் மூன்று காலத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/212&oldid=1472495" இலிருந்து மீள்விக்கப்பட்டது