பக்கம்:இலக்கண வரலாறு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

புலவர்க்கும் ஒப்ப முடிந்தமையால் அவ்வகை சொன்னான் என்பது.

“அஃதே எனின், தன்னை ஒத்த புலவர் இல்லை அன்றே! தான் தலைவன் ஆகலான், எல்லாம் உணர்ந்தான் ஆகலான் எனின், அஃதே கருத்து. அறிந்திலை; தன்னானே உரைக்கப்பட்டது எனினும் பிறவற்றை எல்லாம் திரியவும் திரியாமையும் கொண்டார். இதனைத் திரியாமையே கொண்டார். எல்லாரும் என்பதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது. தன்மதம் உணர்ந்தாரையும் புலவர் என்றான், அறிபொருளுக்கு ஏனோரும் புலவராகலின்” என்றும் (I),

“இவன் மென்சுவைமேல் நடந்தானோர் ஆசிரியன் ஆகலின் இப்பிரிவு (பரத்தையிற் பிரிவு) வேண்டினான் என்பது” (40) என்றும் உரையில் ஆங்காங்கு வரும் பகுதிகளாய் முதனூல் என்பதனை நிலைநாட்டுவதற்காக இவர் படும் பாடுகளும், தடைகளும் வெளிப்படுகின்றன.

பெயர் விளக்கம்

இறையனார் சங்கச் சான்றோருள் ஒருவர் என்பது ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகைப் பாடலாய் வெளிப்பட விளங்கும். நல்லிறையனார் என்பார் அவரின் வேறொரு புலவர். அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது (393). அவர் இறையனாரின் வேறொருவர் என்பதை வெளிப்பட அறிதற்கு வாய்ப்பாகச் சங்க நூன் மரபுப்படி ‘நல்’ அடை பெற்றவர் அப்புலவர். இவ்வாறு கொள்ளத் தொன்ம உலகம் துணியாது எனினும் ஆய்வுலகம் கொள்வதற்குத் தடையொன்றில்லை. அவ்வாறு கொண்ட ஆய்வால் ‘கொங்குதேர் வாழ்க்கை’ முதலான கட்டுரைகள் சில வந்துள. அமைந்த சமய உலகிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/213&oldid=1472496" இலிருந்து மீள்விக்கப்பட்டது