பக்கம்:இலக்கண வரலாறு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

துணை? திருத்துதல்கள் எத்துணை? வாய்வழி நடந்து வந்த உரையெனின் இத்துணைப்பேர் வாய்மாற்றங்களில் எத்துணையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை எவரறியார்? ஒருகால் நக்கீரர் ஆசிரிய வழிமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டர் தம் முந்தை ஆசிரிய வழி முறையை இவ்வாறு கூறினார் என்பது தரும். கீதையாசிரியன் கண்ணன் அல்லன் என்பது மெய்ம்மையாயினும் அதன் பொருள் நயத்தால் போற்றப்படுதல் கண்கூடு! அவ்வாறே இக்களவியல் உரையாசிரியர் எவரே எனினும், நக்கீரர் அச்சிறப்பைக் கட்டிக் கொன்கிறார் என்க.

உரையின் காலம்

இந்நூலில் சங்கச் சான்றோர் பாடல்களுடன் பாண்டிக்கோவைப் பாடல்களும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இக் கோவையுடைய பாண்டியன் நெடுமாறன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டினனாகலின் இவ்வுரை அவன் காலத்திற்குப் பிற்பட்டு எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கவேண்டும் எனத் துணியலாம்.

உரை இயல்

இவ்வுரை அந்தாதியென நடை பயில்கின்றமை சுவைமிக்கது. அக்கால நடையை அடையாளம் காட்டுவது எனினும் அமையும். “அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லவே'' எனத் தொடர்கின்றது, “என்றான்; என”, “கழித்தது; கழிந்த பின்னர்”; “பெய்தது; பெய்தபின்னர்” இப்படியே பக்கம் பக்கமாக உரை செல்கின்றது.

களவு நல்லதாம் வகையை உலகியலுடன் பொருத்திக் காட்டுகிறார்: “ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து (சண்டைவிட்டு) நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவாரை இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/219&oldid=1472510" இலிருந்து மீள்விக்கப்பட்டது