பக்கம்:இலக்கண வரலாறு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

உண்டாயிற்றன்று; முற்கொண்டு அமைந்து கிடந்தது. அது பின்னை ஒருகாலத்து ஓரிடத்து ஒரு காரணத்தான் எய்துவிக்கும். அது போல இன்ன நாள் இன்ன பக்குவத்து இன்னபொழுது இன்ன இடத்து இவள் காரணமாக இவன் தன் உணர்வினன் அல்லளாம் என்பதூஉம், இவன் காரணமாக இவன் தன் உணர்வினன் அல்லளாம் என்பதூஉம் முன்னே முடிந்து கிடந்தன. அது பின்னுங் கொணர்ந்து எய்துவிக்கும். என்னை? ‘ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது’ என்பதாகலான்".

நடைநயம்

இவர் தம் வருணனை நயம் கற்போரைக் கவர்ந்து வயப்படுத்தவல்லது:

“மரகதமணி விளிம்படுத்த
மாணிக்கச்சுனை மருங்கினதோர்
மாதவிவல்லி மண்டபத்துப்
போதுவேய்ந்த பூநாறு கொழு நிழற்கீழ்க்
கடிக் குருக்கத்திக் கொடிபிடித்துத்
தகடுபடு பசும்பொற் சிகரங்களின்
முகடு தொடுத்துவந் திழிதருமருவி
பொன்கொழித்து மணிவரன்றி
மாணிக்கத்தொடு வயிரமுந்தி
அணிகிளரருவி ஆடகப்பாறைமேல்
அதிர்குரல் முரசின் கண்ணிரட்ட
வண்டும்தேனும் யாழ்முரல
வரிக்குயில்கள் இசைபாடத்
தண்தாது தவிசுபடப் போர்த்ததோர்
பளிக்குப் பாறை மணித்தலத்துமிசை
நீல ஆலவட்டம் விரித்தாற் போலத்தன்
கோலக் கலாவம் கொளவிரித்து
முளையிள ஞாயிறின வெயிலெறிப்ப ஓர்
இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/221&oldid=1472517" இலிருந்து மீள்விக்கப்பட்டது