பக்கம்:இலக்கண வரலாறு.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. பிந்து நூல்களின் முந்து நூல்கள்


தொல்காப்பியம், களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியல்காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை. பன்னிருபாட்டியல் முதலியவற்றின் பழைய உரைகளில் மேற்கோளாக ஆளப் பெற்றுள்ள நூல்கள் மிகப்பல. அவற்றுள் பெயரளவான் அறிந்தனவும், பலப்பல நூற்பாக்கள் அளவில் அறிந்தனவும், ஏறத்தாழ நூலுருக் கொள்ளுமாறு கிடைத்தனவும் உள்ளன. அவை பிந்திக் கிளர்ந்த நூல்களுக்கு முந்திநின்று உந்துதலாக அமைந்தவை. ஆதலால், பிந்து நூல்களைக் காணுமுன் அவற்றுள் சிலவற்றைப் பற்றி அறிதல் முறையாகும்.

ந.சி. கந்தையா தொகுத்த தமிழ் இலக்கிய அகராதி, மயிலை சீனி வேங்கடசாமி தொகுத்த மறைந்துபோன தமிழ்நூல்கள், யான் தொகுத்த மேற்கோள் நூற்பா அகரவரிசை, க.ப. அறவாணரின் அமுதசாகரம், அவிநயம், இத்திரகாளியம் முதலிய நூல்கள், யான் தொகுத்து உரை கண்டு வெளிவந்த காக்கை பாடினியம் இன்னவையும் இப்பிந்து நூல்களின் முந்து நூல்கள் ஆய்வுக்கு உதவுகின்றன.

இம் முந்து நூல்களின் எண்ணிக்கை மிகப்பல ஆகலானும், சிலவற்றைப் பெயர் அளவான் மட்டுமே அறியப் பெறுதலாலும் சிலவற்றை மட்டும் இப்பகுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/226&oldid=1472522" இலிருந்து மீள்விக்கப்பட்டது