பக்கம்:இலக்கண வரலாறு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

நத்தத்தர்

நல்லூர் நற்றத்தனார் என்னும் சங்கப் புலவர் சிறுபாணாற்றுப்படை இயற்றியவர். இவர் ஓய்மானாட்டு நல்லியக் கோடனைப் பாடியவர். புறநானூற்றில் பிசிராந்தையாரைக் கண்ட, நத்தத்தனார் பாடியது எனப்பாட வேறுபாடு காணப்படுகிறது (218). இவர்களின் வேறொருவர் இந்நத்தத்தர் ஆவர். அகத்தியர் மாணவர் ஒருவர் நத்தத்தர் என்பதும், திருவள்ளுவ மாலைப் பாடல் ஒன்று நத்தத்தர் பெயர் கொண்டிருப்பதும் எண்ணத் தக்கன. இனி நத்தத்தர் 'அடிநூல்' ஒன்று செய்தார் என்றும், நத்தத்திற்கே 'அடிநூல்' என்றொரு பெயருண்டு என்றும் கூறுவர். ஆனால் அடிநூல் நக்கீரர் செய்ததாக அறியப்படுதலால் 'நக்கீரர்', 'நத்தத்தர்' என ஏடு பெயர்ந்தோர் மயக்கத்தால் நேர்ந்திடுக்கக் கூடுமென எண்ண வேண்டியுளது (யா, வி. 93, 95.)

மேற்கோள்

நத்தத்தம் பற்றிய குறிப்பும் மேற்கோள் நூற்பாக்களும் யாப்பருங்கலக்காரிகை உரையிலும் யாப்பருங்கலவிருத்தி உரையிலும் இடம் பெற்றுள.

“மாவாழ்சுரம் புலிவாழ்சுரம் என்னும் வஞ்சியுரிச்சீர் இரண்டும் உளவாக வைத்து, ஒருபயனோக்கித் தூஉமணி கெழுஉமணி என்றளபெடுத்து, நேர்நடுவாகிய வஞ்சியுரிச் சீர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒரு சாராசிரியர்” என்கிறார் குணசாகரர். (யா. கா. 25). யாப்பருங்கல விருத்தியுடையாரும் இதனைக் குறிக்கிறார் (57). நத்தத்தில் இருந்து மேற்கோள் காட்டும் நாற்பாக்களும்,

“யாப்பெனப் படுவது யாதென வினவின்
தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/239&oldid=1468947" இலிருந்து மீள்விக்கப்பட்டது