பக்கம்:இலக்கண வரலாறு.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199


வெட்சி

தொல்காப்பியர் பன்னிரு படலத்தின் வெட்சிப்படலம் பாடினார் என்றொரு கருத்து வழங்குகிறது. இளம்பூரணர் அதனை, “பன்னிருபடலத்துள், “தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்ன விருவகைத்தே வெட்சி” என இரண்டு கூறுபடக் கூறினாராயினும் முன் வருகின்ற வஞ்சி உழிஞை தும்பை முதலாயின எடுத்துச் செலவு எயில் காத்தல் போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்துத் தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆனிரை கோடலின் இவர் அரசனது ஆணையை நீக்கினாராவர். ஆதலால் அவ்வாறு கூறல் மிகைபடக்கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது” என்று கூறிச் சான்றுடன் மறுக்கிறார் (தொல். புறத்.).

திணை வகை

பன்னிருபடலத்துப் பெருந்திணைப் படலத்து வரும் நூற்பா ஒன்றை யாப்பருங்கல விருத்தி, ‘வஞ்சிப்பாவினுள் ஆசிரியம் மயங்கி வருவது அகத்திணை அல்லாத வழியே’ என்பதற்கு மேற்கோளாகக் காட்டுகிறது. வாகை, பாடாண், பொதுவியல் ஆய மூன்றையும் புறப்புறமெனக் கொள்வனவற்றுள் பன்னிருபடலமும் ஒன்று என்பதைக் குறிக்கிறது (யா. வி. 96).

கைக்கிளை பெருந்திணை என்பவை அகத்திணைப் புறம் என்று பன்னிருபடலம் கூறுவதையும் வெளிப்படுத்துகிறது யாப்பருங்கல உரை.

‘புறப்பொருள்’ தானும் அறமும் இன்பமும் அகலாததாகத் திகழவேண்டும் என்பது பன்னிருபடலக் கருத்து. இதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/244&oldid=1473222" இலிருந்து மீள்விக்கப்பட்டது