பக்கம்:இலக்கண வரலாறு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202


இனம்

தாழிசை துறை விருத்தம் எனப் பாவினத்து இலக்கணமும் இவர் கூறுதலால் இவர் மிக முற்பட்டவர் அல்லர் என்றும், ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆதல் கூடும் என்றும் கொள்ளலாம்.

பாவும் இனமும் மேவிய அன்றி
வேறுபட நடத்துங் கூறுபட வரினும்
ஆறறி புலவர் அறிந்தனர் கொளலே

என்று புறனடை கூறுவதால் பலவகைப் புத்திலக்கணங்களுக்கும் இடந்தருகின்றார்.

வஞ்சிப்பாவிற்கு மூன்றடிச் சிறுமை பிறர் கூற மயேச்சுரர் முதலிய ஒருசார் ஆசிரியர் ஈரடிச் சிறுமை கொண்டதைக் குறிப்பிடுகிறார் யா. வி. உரைகாரர் (93). இவற்றால் சில புதுமைகளுக்கு இவர் இடமாக இருந்தார் என்பது புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/247&oldid=1473225" இலிருந்து மீள்விக்கப்பட்டது