பக்கம்:இலக்கண வரலாறு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்”

என்பது பாயிரம். “பன்னிருபடலம் முதனூலாக வழி நூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்” என்பது பேராசிரியருரை (மரபு.94). இந்நூல் பன்னிரு திணைகளைக் கொண்டிருத்தலும் சான்று.

நூலளவு

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என்னும் ஒன்பது திணைகளுக்கும் திணை இலக்கணத்தைத் துறை வகையால் தொகுத்துக் கூறும் ஒன்பது நூற்பாக்கள் இந்நூலின் திணைதோறும் முதற்கண் உள்ளன. பத்தாவது பொதுவியல், சிறப்பிற் பொதுவியல் காஞ்சிப் பொதுவியல் முல்லைப் பொதுவியல் என நான்கு நூற்பாக்களையும், கைக்கிளைப் படலம் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இரண்டு நூற்பாக்களையும் பெருந்திணைப்படலம் பெண்பாற் கூற்று, இருபாற் பெருந்திணை என இரண்டு நூற்பாக்களையும் ஒழிபு ஒரு நூற்பாவையும், புறம், புறப்புறம் என்பவற்றை விளக்கும் ஒரு நூற்பாவையும் கொண்டு 19 நூற்பாக்களை யுடையதாய் நூல் அமைந்துள்ளது. இந்நூற்பாக்களின் துறையை விளக்கும் ‘கொளு’ என்னும் சிறுவிளக்கம் ஒழிபு நீங்கிய பன்னிரு திணைக்கும் உள்ளது. அவற்றின் எண்ணிக்கை 341. கொளுவின் பொருளை விளக்கும் இலக்கியமெனத் திகழும் வெண்பாக்கள் 341-உம், மருட்பாக்கள் 20-உம் ஆக 361 பாக்கள் உள்ளன.

நூலமைப்பு:

அமைப்பு முறை:

1. வெட்சிப்படலம்.
14. பாதீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/250&oldid=1473282" இலிருந்து மீள்விக்கப்பட்டது