பக்கம்:இலக்கண வரலாறு.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

ஆள்வதும் சிறக்கின்றன. புல்லரிசி கொண்டு ஆக்கிய அவலைத் தருப்பணம் என்கிறார் (10), நெய்தற்பறை அல்லது இரங்கற்பறையை அழப்பறை என்பது புத்தாட்சி.

வேறுபாடு

தமிழ்நெறி விளக்க அகப்பொருட் பகுதிக்கும் பிறநூல்கள் வழியே அறியப்படும் அகப்பொருட் பகுதிக்கும் சில வேறுபாடுகள் உள. அவை: களவுக்கு முன் கைக்கிளையைக் கூறாமை; களவின் பகுதியாகப் பெரும் பாலோரால் கூறப்படும் அறத்தொடுநிலை, உடன்போக்கு என்பவற்றைக் கற்பினுள் கூறுதல்; கூற்றுக்கு உரியவராகக் கூறப்படாத நற்றாய் கூற்று இடம் பெறுதல் என்பவை அவை.

காலம்

இந்நூலையும் உரையையும் பார்க்கையில் இரண்டும் ஓராசிரியராலேயே இயற்றப்பட்டன என்று தோன்றுகின்றது என்கிறார் உ. வே. சா. பேராசிரியர் உரை, களவியற் காரிகை, பரிமேலழகர் உரை ஆகியவற்றில் இந்நூல் சுட்டப்படுதலால் அவர்கள் காலத்திற்கு முற்பட்டது இந்நூல் என்க. இதன் காலத்தைப் பத்தாம் நூற்றாண்டு என்கிறது இலக்கிய வரலாறு — 13ஆம், நூற்றாண்டு (174).

இவ்வுரை மேற்கோள் பாடல்களில் ‘வழுத்தூர் மதிதரன்’ - என்பான் (6, 32, 52) சிறப்பப் பேசப்படுகின்றான், அவ்வழுத்தூர் தஞ்சை மாவட்ட ஐயம்பேட்டைக்கு வடக்கே குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ளது என்பர். இவனைப் பற்றிய குறிப்புக் கிட்டுமாயின் இவ்வாசிரியரைப் பற்றிய காலமும் தெளிவாகும்.

இந்நூலில் உள்ள மேற்கோள் இலக்கியப் பாடல்களுள் மிகப்பல களவியல் காரிகையிலும் மேற்கோளாக வந்துள சில பாடல்கள் நம்பியகப் பொருள் விளக்க மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/259&oldid=1473298" இலிருந்து மீள்விக்கப்பட்டது