பக்கம்:இலக்கண வரலாறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxv


வீரசோழிய ஆசிரியர் பற்றி, “அவர் இம்மண்ணின் மரபையே முற்றாக விடுத்து எங்கோ வட்டமிடுவது புலப்படுகின்றது” என்று கூறுகின்றார் (பக், 245).

பிரயோக விவேகம் பற்றிப் பின் வருமாறு உரைக்கின்றார்:

“வடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல; ஒரு மொழி என்னும் மயக்கவுணர்வுடன், வடமொழியே தமிழ் மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றிய நூல்” (பக். 360).

தமிழுக்கு முற்றிலும் முரணான கருத்துகளைக் கூறும் ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியரை, “இப்படியா தட்டுக் கெட்டுப் போகும், கட்டுவிடாக் கல்வித் திறம்?” என்று சுட்டிக் காட்டுகின்றார்.

நன்னூலுக்கு உரை எழுதிய இராமாநுசக் கவிராயர், ‘தொல்லை வடிவின் எல்லா எழுத்தும்’ என்ற நூற்பாவை, சிறிது மாற்றி, “ஆண்டு எய்தும் ஏகாரம் ஓகாரம் மெய் புள்ளி” என்று திருத்தி விட்டார். இந்த மாற்றத்தை உடன்படாத நூலாசிரியர், “எத்தகு சிறந்த பாடம் எனினும் மூலத்தில் கை வைத்தல் கூடாது” என்று கடிந்து உரைக்கின்றார் (பக். 305).

நன்னூல் உரையாசிரியர்களில் ஒருவரான சடகோப ராமாநுசாச்சாரியார், தம் உரையில் “பவணந்தி முனிவர் பிராமண வருணத்தில் தோன்றினார்” என்று எவரும் கூறாத புதிய செய்தியைத் தாமே புனைந்து கூறியுள்ளார். இந்த நூலின் ஆசிரியர் அவர் கொள்கையை எதிர்க்கின்றார்! (பக். 313).

13. காலச்சூழலைச் சுட்டுதல்

இலக்கண நூலும் உரையும் இயற்றும் புலவர்கள் தாம் வாழும் காலத்தின் இயல்புக்கு ஆட்பட்டுத் தவறு செய்துள்ளனர் என்ற கருத்தை, நூலாசிரியர் குறிப்பிடும் இடங்கள் உள்ளன.

1. பாட்டியல் நூல்கள் நால்வருண வேறுபாடுகளை வற்புறுத்தி இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறியுள்ளன. எழுதுகின்ற ஓலைகளின் அளவிலும் நால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/26&oldid=1480822" இலிருந்து மீள்விக்கப்பட்டது