பக்கம்:இலக்கண வரலாறு.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. யாப்பருங்கலம்


யாப்பாகிய அரிய அணிகலம் என்றும், யாப்பாகிய கடலைக் கடக்க அமைந்த அரிய கலம் (கப்பல்) என்றும் பொருள் கொள்ள அமைந்த அரிய நூல். இதனை இயற்றிய ஆசிரியர் அமித சாகரனார்.

பெயர்

இவர் பெயரை யாப்பருங்கலப் பாயிரம்,

அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோன்

என்கிறது. அளப்பரும் கடற்பெயர் என்பது ‘அமித சாகரம்’; அப்பெயரை உடையவன் அமிதசாகரன் என்க.

யாப்பருங்கலக் காரிகையின் உரையாசிரியர், “இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ எனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது” என்பதும் அறியத் தக்கது. இந்நாலுக்குப் பின்னே, காரிகையையும் இவரே செய்தார் ஆகலின், அந்நூல் உரை அவ்வாறு கூறிற்று என்க.

யாப்பருங்கல விருத்தியின் முதற்பதிப்பு ‘அமிர்த சாகரனார் இயற்றிய யாப்பருங்கலம்’ என்றே வெளிப்பட்டது. அன்றியும் காரிகை, வீரசோழியம் ஆகியவற்றை எடுத்துக் காட்டி அமிர்தசாகரனார் என்பது ஐயுறவின்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/261&oldid=1473301" இலிருந்து மீள்விக்கப்பட்டது