பக்கம்:இலக்கண வரலாறு.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230


நூல்

இந்நூல் காரிகையாப்பு உடையதென்றும், மகடூஉ முன்னிலையுடையதென் றும் அவையடக்கம் உடையதென்றும், உதாரணம், முதனினைப்பு ஆகியவற்றை உடையதென்றும் யாப்பருங்கலத்திற்கு அங்கமாய் அலங்கார முடையதாய் அமைந்ததென்றும் எடுத்துக்காட்டுத் தந்து உரையாசிரியர் பாயிரவுரை முகப்பிலேயே பகர்ந்து விடுகின்றார்.

காரிகை, உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்னும் மூவியல்களையும் மூவியல்களுக்கும் முறையே 20, 15, 9 ஆக 44 காரிகைகளையும் கொண்டுளது.

இவற்றுள் நேரசை முதலாகிய காரிகை 21; நிரையசை முதலாகிய காரிகை 23. நேரசை முதலாகிய காரிகை அடிக்கு ஒற்று நீக்கிய எழுத்து 16. நிரையசை முதலாகிய காரிகை அடிக்கு ஒற்று நீக்கிய எழுத்து 17. ஆக இவ்வகையால் கணக்கிட மொத்த எழுத்துகள் 2908. இதனைக் கிரந்த வகையால் கணக்கிடும் உரையாசிரியர் 90 கிரந்தமும் 28 எழுத்தும் என்கிறார். ஒரு கிரந்தத்திற்கு எழுத்து 32 என்பது அவ்வடமொழிக் கணக்கீடு. “இந்நூல் எவ்வளவைத்தோ எனின் ஓத்து வகையால் மூன்றும், காரிகை வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் தொண்ணூறு கிரந்தமும் இருபத்தெட்டு எழுத்தும் எனக் கொள்க”" என்பது அவருரை.

உரைச்சூத்திரம்

அமிதசாகரர் பெருவாழ்வுடையராக விளங்கினார் என்றும், முதற்கண் யாப்பருங்கலத்தைச் செய்து, அதன் பின்னர் ஏற்பட்ட பட்டறிவால் கட்டொழுங்கும் எளிமையும் இனிமையும் விளங்க எவரும் எளிமையாய்க் கற்றுத் தெளியவேண்டும் என்னும் பெருநோக்கால் நன்முதுமையில் யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/275&oldid=1473775" இலிருந்து மீள்விக்கப்பட்டது