பக்கம்:இலக்கண வரலாறு.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்கு இலக்கணம் காட்டல் என்னும் நெறியைத் தூக்கி எறிந்துவிட்டு, அவ்விலக்கணத்திற்கு இலக்கியம் படைக்கத் தூண்டும் நெறியே இவர் நெறியாய் அமைகின்றது.

அகம்

அகம் புறம் என்னும் தொல்லோர் முறை, அகம், புறம், அகப்புறம், புறப்புறமெனப் பின்னோரால் பாகுபடுத்தப்பட்டமை இந்நூல் வழியேயும் அறியலாம். அன்றி அளப்பான் அளவை பிரமேயம் என வேறு பார்வையும் பார்க்கிறார்! களவு கற்புச் செய்திகள் கனிந்தில!

யாப்பு

ஈரசைச் சீரை, முற்சீர், முதற்சீர் எனலும், நேரால் முடியும் மூவசைச் சீரை இடைச்சீர் எனலும், திரையால் முடியும் மூவசைச்சீரைக் கடைச்சீர், பிற்சீர் எனலும் இவர் வழக்கு.

இருசீர் முச்சீர் நாற்சீர் ஐஞ்சீர் அறுசீர் முதலாம் அடிகளை முறையே குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி எனல் வழிவழித் தமிழ் முறை. கட்டளை அடி (எழுத்தெண்ணிய அடி) இருந்த நாள் தொட்டுச் சீர் வகையடி வந்த காலத்திலும் மாறாத மரபு. அவ்வடிகளை முறையே அந்தரம், கால், தீ, புனல், மண் பெயரால் இவர் வழங்குகின்றார். அந்தரம் முதலாகச் சொல்பவற்றையே குறள் முதலியவாகக் கூறுவர் என்று புத்தமித்திரனார் கூறும்போது, அவர் இம்மண்ணின் மரபையே முற்றாக விடுத்து எங்கோ வட்டமிடுவது புலப்படுகின்றது! இதனால் இவர் மரபு மொழி வடமொழியாய்த் தமிழ்கற்று நூல் செய்தவராக வேண்டும் எனக்கொள்ளலாம்

விண்ணில், ஒலியாம் ஒரு தன்மையும், காற்றில், ஒளி ஊறு ஆகிய இரு தன்மைகளும், தீயில், ஒலி மாறு ஒளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/290&oldid=1473876" இலிருந்து மீள்விக்கப்பட்டது