பக்கம்:இலக்கண வரலாறு.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


இதனை

“புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா பிறப்பு”

என்று ஓசையூட்டுக என்கிறார். இவ்வாறே சில பாடல்களை ஓசையூட்டிக் காட்டுகிறார்.

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவுக்குரிய எடுத்துக்காட்டின் சுரிதகத்தில்,

“அகலி லாநின் றடியினை பரவுதும்
வெல்படைத் தொண்டிமான் விறற்சே னாபதி
சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு
பொங்குபுகழ் வில்லவன் தன் புறக்கொடை கொண்டு
பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன்
மலிதரு பார்மிசை மன்னுவோன் எனவே”

என்பது வாழ்த்தாக அமைவது மட்டுமன்றிப் பொன்பற்றி காவலனின் வரலாற்றுக் குறிப்புகளையும் உள்ளடக்கிய நயமுடையதாக விளங்குகின்றது (115).

பொருள்கோள்

இலக்கணர் மரபாகக் கூறும் பொருள்கோள் என்பதைப் பொருணடை என்று கூறுவதுடன் வள்ளி, வாழை, கரும்பு, பலவு, அசோகு, விற்பூட்டு, புனலாறு எனப் பொருள்கோள் ஏழு கூறி அதன் இயல்பையும் கூறுகிறார். இது புதுவழக்காகும் (90-94).

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”

“கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர்
படாஅ முலைமேல் துகில்”

இவையெல்லாம் குறட்போலி என்பதும்,

“கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகா அமை வல்லதே ஒற்று”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/297&oldid=1473897" இலிருந்து மீள்விக்கப்பட்டது