பக்கம்:இலக்கண வரலாறு.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253


என்பது சிந்துப்போலி என்பதும் கொடுமைக் காட்சி நமக்கு வழங்குதல் உறுதி. எனினும், “திருவள்ளுவப் பயனெல்லாங் குறள் வெண்பா என்றமையால் அஃது குற்றமெனில், அற்றன்று; அவையெல்லாம் ஒரு பெயராலே வழங்க வேண்டாவோ எனின், குண்டலகேசி விருத்தம், கலிவிருத்தம், எலிவிருத்தம், நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுட் கலித்துறைகளும் உளவாம் ஆதலால் குற்ற மாகாது” என்று அமைதி கூறுவது கொடுமையிற் கொடுமையாய் உள்ளது. அரிதுபெற்ற புலமை இப்படியாயிற்றே என்னும் ஏக்கம் தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகின்றது. இப்படியே இவ்வழிச் செல்லும் நூல்களும் தமிழிலக்கண மரபினை முற்றாக அழிக்க முயன்றும் முடியாமையை எண்ணிச் சீரிளமைத் திறம் வியந்து போற்றவே முடிகின்றது.

வீரசோழிய முதற்பதிப்பு கி. பி. 1881-இல் சி. வை. தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம் பதிப்பும் அவரால் 1885-இல் கொண்டுவரப்பட்டது. 1886-இல் மூலப்பதிப்பு இராமசுவாமிகள் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. கழகப் பதிப்பாகக் கா. ர. கோவிந்தராச முதலியார் குறிப்புரை விளக்கவுரைகளுடன் வெளிவந்தது.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/298&oldid=1473899" இலிருந்து மீள்விக்கப்பட்டது