பக்கம்:இலக்கண வரலாறு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257

ஊர்-சமயம்

குணவீர பண்டிதரின் ஊராகிய களந்தை என்னும் களத்தூர் தொண்டை மண்டலம் சார்ந்ததென அம்மண்டலச் சதகம் கூறுகின்றது. அக்களத்தூர் தொண்டை மண்டலத்துக் கோட்டங்கள் இருபத்து நான்கனுள் ஒன்று. காஞ்சிக்குத் தென்கிழக்கில் 45 கிலோமீட்டர் தொலைவில் அவ்வூர் உள்ளதென அச் சதகஉரை கூறுகின்றது. குணவீர பண்டிதரின் ஆசிரியர் வச்சணந்தி முனிவர் என்பதும், சமண சமயத்தார் என்பதும் மேற்குறித்த பாயிரப் பகுதியால் விளங்குவனவே.

மேலும் “பூவின்மேல் வந்தருளும் புங்கவன்” (1) எனப் பாயிரமும் “தாதார் மலர்ப்பிண்டித் தத்துவனை வந்தித்து” எனச் சொல்லதிகாரத் தொடக்கமும் (25) கூறுவதும் அறியத்தக்கன.

காலம்

வெண்பாப் பாட்டியல் உரைப்பாயிரத்தில், “காலம் என்பது இன்னார் காலத்து இந்நூல் செய்த தென்றல். இந்நூல் யார் காலத்துச் செய்ததோ எனின், குருத்தவா மணிமுடிக் கொற்றவர் கோமான், தருத்தகு மணிமுடித் திரிபுவன தேவன் என்னும் அரசன் காலத்திற் செய்தது என்று உணர்க” எனப்பட்டுள்ளது. இவ்வரசனை ஆய்ந்த நேமிநாத முதற்பதிப்பாசிரியர் இரா. இராகவ ஐயங்கார், “திரிபுவன தேவன் என்னும் பெயருடையவன் குலோத்துங்க சோழன். அவன் காலம் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது” என்பர். இக்குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவன். இவன் காலம் கி.பி. 1178-1218. ஆதலால் இக்குணவீர பண்டிதர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகவோ, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும். ‘குலோத்துங்கன்’ என்னும் பெயரமைதியைச் சுட்டுகிறது உரை (10). இக்

இ.வ-17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/302&oldid=1474222" இலிருந்து மீள்விக்கப்பட்டது