பக்கம்:இலக்கண வரலாறு.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



259

என்று கூறுதலால் தொல்காப்பியத்தை, முன்னூலாகக் கொண்டு சொல்லதிகாரத்தை இயற்றினார் எனக் கருதலாம்.

இந்நூல் வெண்பா யாப்பால் அமைந்துள்ளது. இவ்வாறே இவர் இயற்றிய பாட்டியலும் வெண்பா யாப்பால் அமைந்திருத்தலும், வெண்பாப் பாட்டியல் எனப்பெயர் பெற்றிருத்தலும் ஒப்பு நோக்கத்தக்கது.

எழுத்ததிகார வெண்பா 24; சொல்லதிகார வெண்பா 71; பாயிரச் செய்யுள்கள், அவையடக்கச் செய்யுள்கள், தற்சிறப்புப் பாயிரச் செய்யுள்கள் ஆகியவை 4; ஆக 99 வெண்பாக்கள் உள்ளன.

எழுத்ததிகாரத்தின் வழியே அறியப்படும் பொருள்கள் எண், பெயர், முறை, மாத்திரை, பிறப்பு, வடிவு, புணர்ச்சி ஆகிய ஏழும் ஆகும். சொல்லதிகாரம் மொழியாக்க மரபு முதலாகக் கூறப்பட்ட இயற்பிரிவுகளின் பெயர்களை அறியவே அது கூறும் பொருள் வகை விளங்கும்.

நூற்பா யாப்பு இலக்கணத்திற்கெனவே அமைந்தது. அமைப்பு எளிமையும், பொருளோட்ட இயற்கையும் உடையது. யாப்பியல் இலக்கணம் நோக்கி இடர்களை நோக்க வேண்டாத ஓட்டம் உடையது. ஆயினும் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆயனவும் இலக்கண நூற்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியத்தானும் வெண்பாவானும் குத்திரம் செய்யப்படும் (மரபு. 100) என்கிறார் பேராசிரியர். புறப்பொருள் வெண்பாமாலையின் ‘வெண்பா’வும் முற்றூண்டலாக அமைந்திருக்கவும் கூடும்.

“ஒன்றன் பேர் ஒன்றற் குரைப்பதாம் ஆகுபெயர்
சென்றவைதாந் தம்முதலிற் சேர்தலோ-டொன்றாத
வேறொன்றிற் சேர்தல் எனஇரண்டாம் வேற்கண்ணாய்
ஈறு திரிதலுமுண் டீண்டு”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/304&oldid=1474228" இலிருந்து மீள்விக்கப்பட்டது