பக்கம்:இலக்கண வரலாறு.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

என்பது ஆகுபெயர் பற்றிய வெண்பா. இடர்ப்பாடு இல்லாமல் இவர்க்கு வெண்பா யாப்புக் கைவந்திருத்தல் தெளிவாகும்.

“ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்

தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே”
(290)

என்னும் நன்னூலார் நடைக்கு இவர் நடை முன்னடையாதல் இவ்வெண்பாவின் முதலடியால் கண்டுகொள்ளக் கூடியதே.

உரை

நேமிநாதத்தின் உரையாசிரியர் எவர் என்ற குறிப்பு அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லை. என்னுதலிற்றோ எனின் என்று தொடங்கி யுரைக்கிறது. பொழிப்புரையாக நடக்கிறது. விளக்கவுரை, எடுத்துக்காட்டு ஆகியனவும் கொண்டுளது. பெரும்பாலும் பேருரையாகவே செல்கின்றது. இலக்கணச்சான்றுகளை மிகுதியாகக் காட்டுகின்றது. எழுத்தின் பிறப்புப்பற்றிக் கூறும் வெண்பாவில் (6) தொல்காப்பியப் பிறப்பியல் 19 நூற்பாக்களையுமே காட்டி விடுகிறார்.

‘எழுத்தின் இலக்கணத்தைச் சொல்லால் உரைப்பன்’ என்னும் பாயிரத் தொடரை விளக்குகின்றார்.

‘சொல்லால் உரைப்பன்’ என்றது என்னை? பிறவாற்றானும் உரைக்குமாறு உண்டோ எனின், உண்மை சொல்லுதல் குற்றமன்று; கண்ணாற் பார்த்தான்; வாயாற் சொன்னான்; என்றாற்போல என்க. அன்றியும், எழுத்திலக்கணத்தைச் சொல்லால் உரைப்பது என்னாத பொழுது சொல்லிலக்கணத்தைச் சொல்லால் உணர்த்தி எழுத்திலக்கணத்தை எழுத்தான் உணர்த்துபவோ? என்று கருதுவார்க்குச் சொல்லிலக்கணமுஞ் சொல்லால் உணர்த்துப என்றற்கு இங்ஙனம் சொல்லப்பட்டது. என்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/305&oldid=1466404" இலிருந்து மீள்விக்கப்பட்டது