பக்கம்:இலக்கண வரலாறு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

261

எனின், இரும்பினான் மரத்தொடக்கத்தனவற்றை அறுப்பார் அவ்விரும்பு தன்னையும் இரும்பினான் அறுப்பார் அதுபோல எனக் கொள்க” என்கிறார்.

உவமையாலும் விளக்குகிறார்:

“வல்லினம் கன்மேல் விரல் இட்டாற்போலவும், மெல்லினம் மணன்மேல் விரல் இட்டாற்போலவும் இடையினம் மண்மேல் விரல் இட்டாற்போலவும்” (உ) என மூவின அமைதியை உவமையால் காட்டுகிறார்.

பழக்கவழக்க எடுத்துக்காட்டும் உண்டு:

“உலற்ற மின்றிப் பயின்றார் ஒரு சான்றார், மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன் எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறி நின்றேன் என்னற்க. தனக்கு உற்ற துரைத்து இது காரணத்தால் உலறி நின்றேன் என்க” என்பது அது. உலற்றுதல் முடியைக் காற்றுப்படக் கோதிவிடுதல். உலற்றுதல் சிலர் வழக்கு; உலற்றாமை சிலர் வழக்கு; உலற்றுவார் தாம் உலற்றுதற்குக் காரணம் கூறல் வழக்கு என்கிறார் (35).

சிறப்புப்பெயர் இயற்பெயர் வருமாற்றை எடுத்துக் காட்டுகிறார்:

சோழன் நலங்கிள்ளி, படைத்தலைவன் கொற்றன் என்பவை சிறப்புப் பெயரின் பின் இயற்பெயர் வருவன. இப்பெயர் இயற்பெயர் முன்னாகவும் சிறப்புப்பெயர் பின்னாகவும் வருவதாயின் ‘பண்பு ஒட்டி வலித்தல்லது வாராது’ என்கிறார். அவை நலங்கிள்ளிச் சோழன், கொற்றப் படைத்தலைவன் எனவரும் என்கிறார். (38)

எடுத்துக்காட்டைச் சிறுகதை போலப் படைத்துக் கூறுவதையும் இவர் மேற்கொள்கிறார்:

“செக்கினுள் எள்பெய்து, ஆட்டுவார் இல்லா மோட்டு முதுகிழவி மன்றத் திருந்த வன்றிறல் இளைஞரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/306&oldid=1474229" இலிருந்து மீள்விக்கப்பட்டது