பக்கம்:இலக்கண வரலாறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxx


ஐயன் + ஆரிதன் +ஆர் என்று பிரித்து ஆரித கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆதலின் ஆரிதன் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இந்த நூலின் - ஆசிரியர் இத்தகைய இடங்களை மறு ஆய்வு செய்து அடுத்த பதிப்பில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.


17. ஆசிரியர் நினைவுக்கு


நூலின் தொடக்கத்திலேயே ஆசிரியர் தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வளர்ச்சியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிச் சேர்த்திருந்தால் நூல் மிகவும் சிறப்படைத்திருக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் எழுத்து சொல் பொருள் என மூன்று பகுதியாக இருந்த இலக்கணம், களவியல் உரை தோன்றிய காலத்தில் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து நான்கு பகுதிகள் தோன்றின. தண்டியலங்காரம் ஐந்தாவதாகத் தோன்றிய பின்னர், இலக்கண வகைகளைக் கூறுகின்ற பாட்டியல்கள் பெருகின. பாவினங்களும், விருத்தப்பா வகைகளும் தோன்றியபின் அவற்றிற்கும் தனித்தனி நூல்கள் தோன்றின. பெண்களை அடி முதல் முடிவரை வருணிக்கும் முறைபற்றிக் கூறும் உவமான சங்கிரகங்கள் சில தோன்றின. இவற்றிற்கும் மேலாகப் புலமை இலக்கணம் தோன்றியது.

இவற்றிற்கு இடையே நிகண்டு நூல்கள் தோன்றின.

இவற்றின் வரலாறு விரிவாக ஆயவேண்டிய பகுதியாகும்.

இவற்றோடு இலக்கணக் கொள்கைகள் காலத்திற்குக் காலம் எவ்வாறு மாறி அமைந்துள்ளன என்பதை ஆய்ந்து கூறுவது மிகவும் பயன் தரும்.

சார்பு எழுத்துகள் பற்றிய கொள்கை வேறுபாடு, அகத்திணைக் கோட்பாடு, மரபு மாற்றங்கள், புறத்திணை வளர்ச்சி, இலக்கிய வகைகளின் பெருக்கமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/31&oldid=1480828" இலிருந்து மீள்விக்கப்பட்டது