பக்கம்:இலக்கண வரலாறு.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

நடை பல பயின்ற வடமொழிக்கன்றே; செந்தமிழ் மொழியின் வந்தவாறு என்னை? எனின், இதன் முதனூல் செய்த ஆசிரியர் உலகத்துச் சொல்லையெல்லாம் சமஸ்கிருதம் பிராகிருதம் அபப்பிரஞ்சம் என்று மூன்று வகைப்படுத்தினார். அவற்றுள் சமஸ்கிருதம் புத்தேளிர் மொழியெனவும், அபப்பிரபஞ்சம் இதர சாதிகளாகிய இழிசனர் மொழியெனவும் கூறினார். அதனால் பிராகிருதம் எல்லா நாட்டு மொழியெனவும் படும். அல்லதூஉம் பிரகிருதி என்பது இயல்பாகலான் பிராகிருதம் இயல்பு மொழி” என்று விளக்குகிறார். மேலும், “தமிழ்ச் சொல்லெல்லாம் பிராகிருதம் எனப்படும். அச் சொற்களால் இயற்றப்படும் எல்லாக் கவிக்கும் அவ்வலங்காரம் அனைத்தும் உரியவாகலின் ஈண்டு மொழி பெயர்த்து உரைக்கப் பட்டன” என்கிறார்.

நூலாசிரியர் கருத்தா, நூலாசிரியர் மேல் உரையாசிரியர் திணிப்பா இக்கருத்துகள் என்னும் மயக்கத்தை யுண்டாக்குகின்றது இவ்வுரைப் பகுதி.

மடக்கணி முதலிய சொல்லணிகளுக்கு இவ்வுரை மிக இன்றியமையாததாகப் புலப்படுகின்றது. இல்லாக்கால் சில பாடல்களின் பொருளை மிக இடர்ப்பட்டே அறிய நேரும்.

பதிப்பு

இந்நூலுக்குரிய பதிப்பில் முன்னது, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் பதிப்பு. அது 1857இல் வந்தது. 1901இல் வை. மு. சடகோப இராமாநுசாசாரியார் குறிப்புரையுடன் வெளியிட்டார். 1903இல் மதுரைத் தமிழ்ச் சங்க நிறுவனர் பாண்டித்துரையார் விருப்பத்திற்கு இணங்க சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய புத்துரை வெளிவந்தது. 1920இல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/321&oldid=1474246" இலிருந்து மீள்விக்கப்பட்டது