பக்கம்:இலக்கண வரலாறு.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

நிறைவாழ்நாள் உடையராய் இருந்து ஐந்திலக்கணத்தையும் யாத்திருந்து நம் கைக்கு வாய்த்திருக்குமெனின் அவர்காலப் பொருளியல் கொள்கைகளைத் தெரிந்திருக்க வாய்த்திருக்கும். அஃதின்மை பேரிழப்பேயாம்.

நன்னூலுக்கு உரைகண்டார் பலர்; அதுவும் அந்நூற் சிறப்புக்கு ஒரு சான்றே. முதலுரைகாரர் சங்கர நமச்சிவாயர், ஊற்றங்கால் ஆண்டிப்புலவர், கூழங்கைத் தம்பிரான், ஆறுமுகநாவலர், இராமாநுசக் கவிராயர், வேதகிரி முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், கா. கோபாலாச்சாரியார், பவானந்தம் பிள்ளை , வை. மு. சடகோப ராமானுசாச்சாரியார், கோ. இராமலிங்கத் தம்பிரான், சர். பொன்னம்பலம் இராமநாதன், கா. நமச்சிவாய முதலியார் முதலியோர்களால் உரையெழுதப்பட்டுள்ளது. மாணவர்க்கு ஏற்பச் சுருக்கியும் எளிமைப்படுத்தியும் உரை நூல்கள் பல வந்துள. தொல்காப்பிய நன்னூல் ஒப்பீட்டு ஆய்வுகளும் நிகழ்ந்துள.

சங்கர நமச்சிவாயர் உரையில் வேண்டுமிடங்களில் திருத்தம் செய்து புதிய விளக்கங்களை விரித்துச் சிவஞான முனிவரால் ‘புத்தம் புத்துரை’ என்னும் உரையும் உண்டாயிற்று. இலக்கண வினாவிடை என்னும் பெயரால் நன்னூற் பொருளைத் தழுவி ஆறுமுக நாவலரால் ஒரு நூல் செய்யப்பட்டுப் பலபதிப்புகளையும் அடைந்துள்ளது. இவற்றுள் சில உரைகளைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

அ. மயிலை நாதர்

பெயர்

நன்னூலுக்கு முதன் முதல் உரைகண்டவர் மயிலை நாதர். மயிலை என்பது முன்பு ‘மயிலாப்பில்’ என்றும் இன்று ‘மயிலாப்பூர்’ என்று வழங்கப்படுவதாகிய சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/331&oldid=1474257" இலிருந்து மீள்விக்கப்பட்டது