பக்கம்:இலக்கண வரலாறு.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

மாநகர்ப் பகுதியாகும். ஆங்குக் கோயில் கொண்டுள்ள சமணத் தீர்த்தங்கரர் நேமிநாதர். அவர் பெயர் மயிலை நாதர் என்பதுமாம். அப்பெயரைப் பெயராகக் கொண்ட, சமண சமயப் புலவர் மயிலை நாதர். நூலாசிரியர் போலவே உரையாசிரியரும் சமண சமயத்தினர்.

முதல் உரை

மயிலை நாதர் உரை நன்னூல் எழுத்து சொல் இரண்டற்கும் முழுமையாகக் கிடைத்துள்ளது. இவர் காலத்திலோ இவர்க்கு முன்னரோ நன்னூலுக்குப் பிறிதோருரையும் இருந்த தென்பதை இவருரையால் அறிய வாய்க்கின்றது. ஆசிரிய மரபில் சொல்லிவரும் உரையாகவும் அஃதிருந்திருத்தல் கூடும். எவ்வாறாயினும் நன்னூலுக்குக் கிடைத்துள்ள உரைகளுள் முற்பட்டது மயிலை நாதருரையே.

புரவலன் புகழ்

சீயகங்கன் சிறப்பை நன்னூற் சிறப்புப் பாயிரம்,

“கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோன் சீயகங்கன்
அருங்கலை விநோதன் அமரா பரணன்”

என்று சிறப்பிக்கின்றதெனின் பொலிவுமிக்க பொற்குடத்திற்குப் பூவும் பொட்டும் இட்டு வைத்ததுபோல இவர் வரையும் உரைநயம் உள்ளங்கொள்ளை கொள்கிறது.

“கூடாதாரைக் கொன்று கட்டின குரைகழலினையும்,

பற்றலர் பக்கம் பழிமா சறுத்து மற்றுல களிக்கும் மணிமுத்தக் குடையினையும்,

விழைபயன் கருதாது மேதினியவர்க்கு மழைபோலு தவும் மாமலர்க் கையினையும்,

குற்றமற்றுலகில் கொடுங்கலி துரந்து செப்பம் வளர்க்கும் செய்ய கோலினையும் உடையவனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/332&oldid=1474259" இலிருந்து மீள்விக்கப்பட்டது