பக்கம்:இலக்கண வரலாறு.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289

பாராட்டிச் செல்லுதல் இவர்தம் நயந்தக நெஞ்சத்தை வியத்தகக் காட்டுகின்றன.

“மிகத் தெளி கேள்வி அகத்தியனார்”

“ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்”

“அளவறு புலமை அவிநயனார்”

“புவிபுகழ் பெருமை அவிநயனார்”

“உளங்கூர் கேள்வி இளம்பூரணர் என்னும் ஏதமில் மாதவர்”

“தண்டலங் கிழவன் தகைவரு நேமி எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப் பல்லவ தரையன்” என்பவை அவற்றுட் சில.

விளக்கம்

முன்னர் விளங்காதிருத்தவை மயிலைநாதர் உரையால் விளங்கியவை இவையெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் உ. வே. சா.

அவிநயர் சமணர் என்பதும், வெண்பாவும் நூற்பாவுமாகிய இருவகைப் பாவாலும் அவர் நூல் அமைந்ததென்பதும், பழமொழியின் அறியப்படாத முதற்செய்யுள் இன்னது என்பதும், எண்ணூல் என ஒன்று இருந்ததென்பதும், பரிமாண நூலைச் சேர்ந்தது “விதந்த மொழியினம்” என்னும் நூற்பா என்பதும், அவிநய உரையாசிரியர் இவரென்பதும், இளம்பூரணர் துறவி என்பதும் உரைநடையாகவுள்ள இலக்கணத் தொடர்களுக்குரிய நூற்பாக்கள் இவை என்பதும் அவை.

சுருக்கம்

பாயிரப்பகுதி உரையின் இறுதியில் (54), “இப்பாயிரச் சூத்திரங்களை விரித்தெழுதிற் பரக்கும் என்பதனானும் பெரும்பாலும் தாமே பொருள் விளங்கிக் கிடத்தலானும் இ.வ-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/334&oldid=1474264" இலிருந்து மீள்விக்கப்பட்டது