பக்கம்:இலக்கண வரலாறு.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

தக்கதோ என ஒரு வினாவை எழுப்பிக்கொண்டு விடையிறுக்கிறார்:

“நூல் ஒன்றே எனினும் அதிகாரங்கள் பொருளான் வேறுபடுதலானும் முன்னை ஒரு சாரார் ஒரோ அதிகாரத்தை ஒரு நூலாக்கிப் பாயிர முழுதும் பகர்தலானும் ‘ஆதியு மந்தமும் நடுவும் மங்கலம், ஓதிய முறைமையின் உரைப்பராவிடின், ஏதமில் இருநிலக்கிழத்தி இன்புற, நீதியம் பனுவல்கள் நிலவும் என்பவே’ என்பவாகலானும், ‘கற்றதனாற்பயன், குற்றமற்று முற்றவுணர்ந்த ஒற்றை நற்றவன் பொற்றாள் இணைமலர் போற்றல்’ என்பவாகலானும் சொன்னார் எனக்கொள்க” என்கிறார் (257).

பின்னுரைகள் இவ்வுரையினும் திருத்தமும் தெளிவும் பெற்றுள எனின், இவ்வுரையின் கொடை தந்த வளர்ச்சி என்பதால் இவ்வுரையின் சிறப்பு இனிது விளங்கும்.

நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும் உ. வே. சாமிநாதையரால் 1918 இல் வெளியிடப்பட்டது.

ஆ. ஊற்றங்கால் ஆண்டிப் புலவருரை

நன்னூலுக்கு உரைகண்டவருள் இவர் ஒருவர். இவர் கண்ட உரை பாடலால் அமைந்தது. அகநானூற்றுக்குப் பாடற் கருத்தினை பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பான் அகவலால் பாடினான் என்பது இவண் அறியத்தக்கது. இக்காலத்தில் சங்க இலக்கியம், திருக்குறள் நாலடியார் முதலியவற்றுக்குப் பாவினாலேயே உரைவிளக்க நூல்கள் வந்துள்ளன. ஆனால் இலக்கண உரை ஒன்று இவ்வாறு முன்னரே வந்திருத்தல் வியப்புடையதாம்.

ஆசிரியர்

ஆண்டிப் புலவர் செஞ்சிப்பகுதியைச் சார்ந்த ஊற்றங்கால் என்னும் ஊரினர். தந்தையார் பெயர் பாவாடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/336&oldid=1474266" இலிருந்து மீள்விக்கப்பட்டது