பக்கம்:இலக்கண வரலாறு.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

வாத்தியார். இவர் சங்கறுத்து வளையல் முதலியன செய்யும் குடிவழியினர். அதனால் ‘நக்கீரர்’ என்றும் சொல்லப்பட்டுளார், “சங்கறுப்ப தெங்கள் குலம்” என வரும் நக்கீரர் தனிப்பாடல் நினைவு கொள்ளத்தக்கது.

சமயம்

இவர் சைவ சமயத்தவர் என்பதும் சைவத் துறவியாக விளங்கிய ஞானப்பிரகாச குரு என்பவரின் மாணவர் என்பதும் அறியவருகின்றன.

“மன்னுசெஞ் சிச்சீமை சூழ்தொண்டை வளநாட்டில்
வாய்த்த ஊற்றங்காலில்வாழ்
வளையறுப்போர் குலன் பாவாடை வாத்தியார்
மைந்தனாம் நற்கீரனே”

“மன்னுளோர் அறியப் பகுத்தனன் கயிலையான்
வடிவெழுத் தைந்தெ ழுத்தின்
மந்த்ரவுப தேசம் செய்ஞானப்ர காசகுரு
வனச மலரடி சூடுவோன்”

என்னும் பகுதிகளில் மேற்கூறிய செய்திகள் தெளிவாகின்றன.

ஆண்டிப்புலவர் ஆசிரிய நிகண்டு என்னும் நிகண்டை இயற்றியவர். அந்நிகண்டுப் பாயிரத்தில்,

“இயம்பிய நிகண்டின் உரையறிநன் னூலினொடு
இரண்டுமே செய்து வைத்தான்”

“எழுத்துடன் சொல்லெனும் இலக்கணம் வகுத்துரை
இயம்பும் ஆசிரியத்தினால்
நன்னூல் என்னும் பெயர் விளங்கவே செய்தான்”

என வரும் பகுதிகளால் இவர் நன்னூலுக்கு ஆசிரிய விருத்தத்தால் உரை கூறியமை விளங்கும். அந்நூல் ‘நன்னூல் ஆசிரிய விருத்தம்’ என்றும், '‘உரையறி நன்னூல்’' என்றும் வழங்கப்பட்ட தென்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/337&oldid=1474268" இலிருந்து மீள்விக்கப்பட்டது